லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சாந்தனு, பிரேம், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், விஜய் சேதுபதி, கௌரி கிஷன், ரம்யா, தீனா என பலர் நடித்துள்ள படம் மாஸ்டர்.
அண்மையில் தான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்தது. தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்துடன் ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் சூரரை போற்று படம் வெளியாவதாக இருந்தது பின் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் மாஸ்டர் படத்துடன் தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக மிரட்டிய ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் வேட்டை நாய் என்ற படம் வெளியாகவுள்ளதாம்.
இப்படத்தை மன்னாரு படத்தை இயக்கிய எஸ்.ஜெய் சங்கர் இயக்கியுள்ளாராம். ஆர்.கே.சுரேஸ்க்கு ஜோடியாக கடுகு படத்தில் நடித்த சுபிக்ஷா நடித்துள்ளாராம்.
ஏற்கனவே விஜய்யின் சர்க்கார் படத்துடன் மோதுவதாக இருந்த ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி படம் கடைசி நேரத்தில் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.







