19 வருடங்களுக்கு பின் தமிழுக்கு வரும் தளபதியின் ஹீரோயின்!

எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் விஜய் நடித்த நெஞ்சினிலே படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இஷா கோபிக்கர்.

பின் அரவிந்த் சாமி நடித்த என் சுவாச காற்றே, பிரசாந்த் நடித்த ஜோடி, விஜய காந்த நடித்த நரசிம்மா படங்களில் இஷா நடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகையான இவர் திம்மி நராங் என்பவரை திருமண செய்து கொண்டு பின் 2009 ல் கணவரை விட்டு பிரிந்தார்.

இவருக்கு ரியானா என்ற குழந்தையும் இருக்கிறது. நரசிம்மா படத்திற்கு பின் 19 வருடங்கள் கழித்து இப்போது தமிழுக்கு மீண்டும் வந்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் தற்போதைய படமான அயலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் அடுத்ததாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் வெப் சீரிஸில் முக்கிய தொடரில் நடிக்கிறாராம்.