சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தில் அமைந்துள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவ துவங்கிய கரோனா வைரஸானது சுமார் 200 க்கும் அதிகமான நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸிற்கு தற்போது வரை 7,157 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 182,431 பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டு வருகிறது.
இந்த வைரசுடைய தாக்குதலுக்கு சுமார் 724 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும் 853 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 16,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவை கட்டுக்குள் வைக்க அரசு தேவையான முன்னெச்சரிக்கையை தொடர்ந்து செய்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.