விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு கதை கூறும் முன்னணி இயக்குனர்..?

தமிழ் திரையுலகில் தளபதி விஜய், தல அஜித் என்று கூறினால் அவர்களுக்கு என்றே பல லட்சம் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இவர்கள் இவர்களின் படங்கள் என்றால் அது தளபதி, தல ரசிகர்களுக்கு திருவிழா தான்.

ஆம் ஒவ்வொரு திரையரங்கம் திருவிழா காண்பது போல் அந்த அளவிற்கு அதிரடியாக இருக்கும்.

தளபதி விஜய் தற்போது தனது மாஸ்டர் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு இப்படத்தின் ரிலீஸுக்காக காத்துகொண்டு இருக்கிறார்.

இப்படத்திற்கு பிறகு விஜய் சுதா கொங்கரா இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்ற காரணத்தினால் இப்படத்தை தளபதி விஜய் கொஞ்சோம் தள்ளி வைத்துள்ளார் என்ற செய்தியும் தெரியவந்தது.

இந்நிலையில் விஜய்க்கு கதை கூறிய கையோடு இயக்குனர் சுதா கொங்கரா தல அஜித்துக்கும் ஒரு கதை கூற தயாராக உள்ளார் என்று தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளது.