தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சனா கான். கன்னடத்தில் முதல் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர் படவாய்ப்புகள் அதிகமாக கிடைக்கவில்லை என்று பாலிவுட் படங்களில் நடித்து வருகிறது.
பிரபல நடிகர் சல்மான் கானுடன் நடித்து மீண்டும் படவாய்ப்பினை பெற்று பிரபலமானார். இதன்பின் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலிப்பதாக அவருடன் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் என் காதலருடன் எனக்கு பிரேக்கப் ஆகிவுட்டது என்னை ஏமாற்றிவிட்டார் என்று கதறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து பாலிவுட் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வரும் சனாகான் தன் காதலன் என்னிடம் எப்படியெல்லாம் நடந்து கொண்டுள்ளார் என்று ஓப்பனாக பேசி ஆதிர்ச்சியளித்துள்ளார்.
நான் மெல்வினை இப்படி புகார் கூறியதையறிந்து என்னிடம் சண்டையிட்டு, என்னிடம் வந்து சமாதானம் செய்ய முயன்றார். நான் தைரியமாக அவரிடன் பேசினேன். இதைதொடர்ந்து என்னை அடித்து என் கழுத்தினை நெறித்து அடித்து உதைத்துள்ளார். இதனால் ரத்தம் வழிந்தநிலையில் நான் கிடந்தேன். அவர் அடித்து உதைத்திருக்கும் ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த ஆதாரங்களை நான் கூடிய சீக்கிரமே அம்பலப்படுத்தி வெளியில் கூறுவேன் என்று கூறியுள்ளார் நடிகை சனா கான்.