காதலியை தனியாக அழைத்து தந்தையும், மகனும் சேர்ந்து செய்த மோசமான காரியம்.!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் இருக்கும் டாஸ்மாக் ஒன்றில் என்று ஹென்றி ஜயசில் என்ற நபர் மது அருந்த சென்று இருக்கின்றார். அப்பொழுது அங்கே அமல்ராஜ் மற்றும் சேவியர் அருள் என்ற இருவர் மது அருந்தி இருக்கின்றனர்.

ஹென்றியின் கழுத்தில் இருந்த அந்த செயினை கண்ட இருவரும் அவரிடம் நயமாக பேசி பெரும்பாக்கம் ஏரிக்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கின்றனர்.

கொலையாளிகளை கைது செய்த காவல்துறையினர் விசாரித்தபோது மேலும், சில அதிர்ச்சிச் சம்பவங்கள் வெளியாகியிருக்கின்றன. சேவியர் அருளுக்கு மைக்கேல் விஜய் என்ற மகன் இருக்கின்றார். விஜய்யை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷபானா பெண் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் அதிகப்படியான நெருக்கம் ஏற்பட்டதால் சபானா கர்ப்பமடைந்தார்.

இதனால், விஜய்யை திருமணம் செய்துகொள்ள அவர் வற்புறுத்திய நிலையில் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மைக்கேல் விஜய் தனது தந்தையுடன் சேர்ந்து திட்டம் தீட்டி பெரும்பாக்கம் ஏரிக்கு அழைத்துச் சென்று அவரை கொலை செய்து, கை, கால்களை கட்டி, அந்த ஏரியில் தூக்கிப்போட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் தற்போது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததால் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.