உலகை அச்சுறுத்தும் கொரோனா… ரோயல் ஸ்கொட்லன்ட் வங்கி அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் செலுத்த வேண்டிய வீட்டுக்கடன் கொடுப்பனவுகள் (mortgage payments) மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல்களை மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்க ரோயல் ஸ்கொட்லன்ட் வங்கி (RBS) அனுமதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கங்களின் விளைவாக வாடிக்கையாளர்கள் நிதி சிக்கலில் சிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உதாரணமாக, வருமான இழப்பு என்று RBS செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

TSB வங்கியும் வீட்டுக்கடன் கொடுப்பனவுகளுக்கு இரண்டு மாதங்ககள் சலுகை வழங்கச் சம்மதித்துள்ளது.

வைரஸின் தாக்கம் உணரப்படுவதால் மக்களுக்குப் பணம் தேவைப்பட்டால் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து முழுமையாக மீளப்பெற இரு வங்கிகளும் அனுமதித்துள்ளன.

பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு மேலதிக உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளதாக வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

முக்கிய வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யுகே ஃபைனான்ஸ் (UK Finance) தெரிவிக்கையில்; அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிகப் பணத்தை (overdrafts) அதிகரிப்பது அல்லது கடனுக்கான திருப்பிச் செலுத்துதல்கள் அல்லது வீட்டுக்கடன் கொடுப்பனவுகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கவுள்ளன என்று கூறியுள்ளது.