நாசா விண்வெளி ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவித்தல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள பணியாளர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் இதனை கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தனது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அதிரடி அறவித்தலை வெளியிட்டுள்ளது நாசா.

இதற்கு முன்னர் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்கள் என்பனவும் இவ்வாறான அறிவித்தலை பிறப்பித்திருந்தன.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.