தன்னை காட்டிலும் 18 வயது குறைந்த நடிகையை காதல் அஜித் பட வில்லன்!

விஜயகாந்தின் நரசிம்மா, அர்ஜூனுடன் ஜெய்ஹிந்த்-2, லாரன்சின் முனி, சூர்யாவின் ஆதவன், அஜித்துடன் வேதாளம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ் 51 வயதாகும் இவருக்கு ரினா என்ற மனைவி இருந்தார். கடந்த 2009-ல் புற்றுநோயால் ரினா உயிரிழந்தார். இவர்களுக்கு சித்தார்த் என்ற ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில், தற்போது ராகுல் தேவுக்கும், இந்தி நடிகை முக்தா கோட்சேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமியின் காதலியாக முக்தா நடித்து இருந்தார். இவர் இந்தியிலும் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 33 வயதாகும் இவருக்கும் 51 வயதாகும் ராகுல் தேவ்வுக்கும் 18 வயது வித்தியாசம் உள்ளது. முக்தாவுடன் ஏற்பட்டுள்ள காதலை ராகுல் தேவ் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.


காதல் குறித்து ராகுல் தேவ் கூறியதாவது, எனக்கும் முக்தாவுக்கும் உள்ள காதல் மறைந்த எனது மனைவியின் குடும்பத்தினருக்கு தெரியும். ஒரு திருமண விழா இருவரும் சந்தித்து நட்பானோம். அதன் பின்பு தான் இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. எங்கள் இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் காதலுக்கு தடையாக இல்லை” என தெரிவித்தார்.