பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேம் ஷோ ‘சூப்பர் மாம்’. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி, தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் போட்டிகளும் கடுமையாக கொண்டு வருகிறது. இதில் பங்கேற்ற தீபாவிற்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தீபாவிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது, அழகான பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்கேற்கும் இவர் பல விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த ப்ரோமோவில் தீபா தண்ணீரில் நிற்க வைக்கப்பட்ட தூண்களில் தாவி குதித்து வருகிறார். ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட தூரம் இருந்த தூணை தாண்ட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று தாவிய போது அவரது முகம் பலமாக தூணில் மோதி விட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும்,தொடர்ந்து அவரால் விளையாட்டில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் விளையாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.