காவல் அதிகாரியை அடித்து டிக் டாக் வீடியோவில் பதிவு செய்த கொடூரம்.!!

டிக் டாக் செயலியில் பல பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காவல் அதிகாரியை அடித்து டிக் டாக் வீடியோவில் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியை சார்ந்த நபர், ஊர்க்காவல் படை துறையில் பணியாற்றி வருகிறார். இவரை சம்பவத்தன்று இடைமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வாக்குவாதம் செய்துள்ளனர்.

காவல் அதிகாரி இவர்களின் பிடியில் கத்திமுனையில் சிக்கிய நிலையில், காவல் துறை அதிகாரியை ஐவரும் சேர்ந்து அடித்து இதனை விடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், இதனை டிக் டாக் செயலியில் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இது தொடர்பாக ஊர்காவல்படை அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது தொடர்பான புகாரை ஏற்று 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் அதிகாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.