கர்நாடகா மாநிலம் பெட்டதாபட்னா பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இருப்பதாய் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த இளைஞருக்கும் பெட்டதபுரா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் வரும் மார்ச் 16ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
மணமகள் தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று அழைத்ததால், அவரை சந்தித்த போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் தன்னை கத்தியால் புதிதாகவும் அந்த இளைஞன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை.
கல்லூரிப்படிப்பை தொடர வேண்டும் எனவும், தனது பெற்றோர்கள் எவ்வளவு கூறியும் திருமணத்தை நிறுத்ததால்தான். தானே திருமணத்தை நிறுத்த முடிவு செய்த மாப்பிள்ளையை கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







