பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. முதல் நாளே ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடககாதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு பல பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இப்படம் வெளிவந்து தமிழகத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
தற்போது இப்படம் 3 நாட்களில் 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது கோலிவுட் வட்டாரத்தை அதிரவைக்கும் அளவிற்கு சாதனைகளை செய்து வருகிறது.