கொரோனா வைரஸ்….. அமெரிக்காவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் பேசியபோது, கொரோனா வைரஸ் தாக்கிய பெண்மணி ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வைரஸ் தாக்கிய 15 பேர் சிகிச்சை பெற்று நலம்பெற்று வருவதாகவும், எனவே யாரும் பயப்பட வேண்டாம் எனவும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை நம் நாட்டுக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவரை தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ், கடந்த 14 நாட்களில் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனத் தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.