வீடியோவை வெளியிட்ட ஸ்ரீரெட்டி….

உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசிவிட்டு அதன் பின் உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது இல்லை என அந்தர் பல்டி அடித்த ஸ்ரீ ரெட்டியால் தற்போது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திவிட்டு பின்பு கழட்டிவிட்டார்கள் என விஷால், ஸ்ரீகாந்த், ஏ.ஆர். முருகதாஸ்,ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் மீது புகார் கூறியவர் ஸ்ரீரெட்டி.

சமீபத்தில் கூட உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசிவிட்டு, அதன் பின் உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது என அப்படியே அந்தர்பல்டி அடித்தார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் அகோரி போல வேடமிட்டு நடித்த பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு எடுக்கப்பட்ட அந்த வீடியோவை சிவன் மேல் உள்ள காதலால் எடுத்ததாக ஸ்ரீ ரெட்டி விளக்கமளித்துள்ளார். இந்த வீடியோவை கண்ட சமூகவலைத்தள நெட்டிசன்கள் ஸ்ரீரெட்டியை ட்ரோல் செய்து வருகின்றனர்.