சூர்யாவுடன் மீண்டும் இணையும் முன்னணி நடிகை?

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அண்மையில் கூட இப்படத்தின் டீசர், மாறா தீம் மற்றும் வென்யோன் சில்லி என்ற முதல் பாடல் வெளிவந்தது. இப்பாடல் வெளியிட்டு விழா விமானத்தில் நடந்ததை நாம் அறிவோம்.

நடிகர் சூர்யா அடுத்து ஹரி அவர்களின் இயக்கத்தில் நடிக்கபோபவதாக சில தகவல்கள் வெளியானது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன், ரஷ்மிகா மந்தன போன்ற நடிகைகளின் பெயர்கள் அடிப்பட்டது.

இந்நிலையில் நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியது “நான் கண்டிப்பாக சூர்யா அவர்களுடன் மீண்டும் இனைந்து நடிப்பேன். அது என் கனவு” என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் இவர் தான் சூர்யாவின் அடுத்த படத்தின் கதாநாயகி என்று பேச துவங்கி விட்டனர்.

மேலும் இவர் சூர்யாவுடன் அயன் படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.