பிரபல சீரியல் நடிகை அபர்ணா கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வந்தார். கடைசியாக இவர் விஷால் ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு திடீரென ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 2016ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்போது பிரபல சீரியல் நடிகையும் அபர்ணாவின் தோழியுமான உஷா எலிசபெத் அவர் இறந்ததற்கான காரணத்தைக் கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, நீண்ட நாட்கள் படம் மற்றும் சீரியல் வாய்ப்புகள் எதுவும் வராததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளார்.
ஆனால் நிர்வாணமாக தூக்கு மாட்டிக் கொண்டிருந்ததால், உஷா எலிசபெத் கூறிய காரணம் சரியானதா என்பதை பொலிசார்தான் வெளிப்படுத்த வேண்டும்.
பூஜை படத்தில் சூரியும் அபர்ணாவும் நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.







