மார்ச் 18 ஆம் தேதி மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பும் தோனி!

உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி விரைவில் நடைபெற உள்ள 20 ஓவர் போட்டியில் கலந்து கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் ஆனது உலகத்திலேயே மிகப் பெரிய மைதானமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை பிரபலப்படுத்தும் வகையில் இங்கு ஆசிய மற்றும் உலக லெவன் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது அந்த திட்டமானது தோல்வியில் முடிந்து இருப்பதாக தெரிகிறது.

இந்த 20 ஓவர் போட்டி தொடரானது வங்கதேசத்தின் தாகாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் போட்டியானது இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் ஆக மாற்றப்பட்டுள்ளது.முதல் போட்டியானது மார்ச் 18ம் தேதியும் இரண்டாவது போட்டி மார்ச் 21-ம் தேதியும் நடைபெறுகிறது. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் முஜிபுர் ரகுமானின் 100வது  ஆண்டை சிறப்பிக்குமாறு இந்த போட்டி தொடரானது நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டி தொடரில் இந்திய அணியில் இருந்து 5 வீரர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி கோலி ரோஹித், பும்ரா, ஜடேஜா ஆகியோர் செல்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும் அவர்கள் யார் என்பதை பிசிசிஐ பின்னால் அறிவிக்கும் என தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த போட்டிக்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைக்க வேண்டுமென்றால் முன்னணி வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்பதால் தோனி நிச்சயமாக இந்த போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் மீண்டும் அவர் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் முதல் 20 ஓவர் போட்டியில் சர்வதேச போட்டிக்கு களமிறங்க வாய்ப்புள்ளது. இந்த போட்டித் தொடர் முடிந்ததும் இந்தியாவில் நடைபெறும் ஆல்ஸ்டார் ஐபிஎல் போட்டிகளிலும் அதனை அடுத்து நடைபெறும் ஐபிஎல் போட்டிகளிலும் தோனி விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது