இதயத்திருடன் நடிகை காம்னாவா இவங்க?

இதயத்திருடன் படத்தின் மூலம் அனைத்து இளசுகளின் மனதை திருடிய நடிகை காம்னா. இதய திருடன் படத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து, நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான மச்சக்காரன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

2014-ல் பெங்களூரை சேர்ந்த சூரஜ் நாக்பால் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சந்திரிகா என்னும் தெலுகு படத்தில் நடித்தார். பின்னர் என்னும் தாயானதால் சினிமாவில் நடிப்பதை சிறிது ஆண்டுகள் நிறுத்தினார் காம்னா.

திருமணத்திற்கு பின்னர் நடிகை காம்னாவுக்கு குழந்தை பிறந்தாலும் இதுவரை அவரது குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகாமல் தான் இருந்தது.

இந்நிலையில், தற்போது காம்னா கணவர் மற்றும் தனது பெண் குழந்தையுடம் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பெங்களூரில் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.