ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டின் உறுப்புரிமை பெறவுள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் மேலும் ஒரு குழு வெகுவிரைவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெறுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பசில் ராஜபக்ஷவை சந்திக்க ஸ்ரீலசுக எம்பிக்கள் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய ஸ்ரீலசுக – மொட்டு கூட்டணி அமைப்பதில் பேரம் பேசும் அதிகாரம் ஸ்ரீ.ல.சு.க.க்கு இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீ.ல.சு.க தலைமை, மொட்டின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும் என்றும் அரசியல் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.