இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்த வேளை மாடு ஒன்று எதிரே குறுக்கிட்டமையினால் வேன் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துச் சம்பவம் அலிகம்பே சந்தி அருகில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கபடுகின்றது.
மேலும் வானின் சாரதி அவ்வழியால் சென்ற பாத சாரதிகளால் மீட்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.







