நீரிழிவு நோயாளிகள் தமது இரத்தத்தின் சீனியின் அளவை அடிக்கடி கணிக்க கருவி : இலங்கை மாணவிக்கு குவியும் சர்வதேச விருதுகள்!

நீரிழிவு நோயாளிகள் தமது இரத்தத்தின் சீனியின் அளவை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள இலங்கை மாணவியொருவர் இலகுவான வழிமுறையொன்றை உருவாக்கியுள்ளார்.

சீனியின் அளவை பெரும்பாலானவர்கள் அடிக்கடி பரிசோதித்துக் கொள்வதில்லை. அதற்காக அடிக்கடி பணம் செலவிட முடியாத நிலையில் அவர்கள் இருக்கலாம். இதற்காகவே, இலங்கை மாணவியொருவர் எளிமையாள மாற்று வழியை உருவாக்கியுள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டதாரி மதுஷி செவ்வந்தி வெலிகல உருவாக்கியுள்ளார்.

நீரிழிவு நோயாளிகள் தமது இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை பரிசோதித்துக் கொள்வதற்கு செலவற்ற, இலகுவான வழிமுறையொன்றை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த கருவிகளை உருவாக்கியுள்ளேன்.

கையடக்க தொலைபேசியிலேயே நீரிழிவின் அளவை கணிப்பிடும் விதமான சாதனத்தை உருவாக்கியுள்ளேன். ஏனெனில் வியர்வைக்கும் சீனிக்குமிடையில் தொடர்புள்ளதால் இந்த வழியில் முயற்சிக்கலாமென நினைத்தேன்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மூத்த விரிவுரையாளர் டிம் பெரேரா இந்த திட்டத்தில் எனக்கு ஆதரவளித்தார்.

ஒருவரின் விரல்களில் ஏற்படும் வியர்வையின் மூலம் நீரிழிவின் அளவை கணிப்பிட்டு கொள்ளலாம். முதலில் இரண்டு விரல்களை குறிப்பிட்ட கருவில் வைக்க வேண்டும். சில தரவுகளையும் உள்ளீடு செய்ய வேண்டும். உணவு, உணவு உட்கொண்ட நேரம் உள்ளிட்ட சில தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர், ப்ளூரூத் தொழில்நுட்பத்தின் ஊடாக கையடக்க தொலைபேசியில் அதன் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்த கருவி சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ளது. பிரித்தானியாவில் நடந்த சர்வதேச கண்காட்சி, ஆசியா பசிபிக் பிராந்திய தகவல்
தொழில்நுட்ப விருதுகள் APICTA உள்ளிட்டவற்றில் பரிசுகளை வென்றுள்ளது.