பூதாகரமாக வெடிக்கும் ஈழத்து தர்ஷனின் காதல்! எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ரசிகர்கள்….

சனம் ஷெட்டியுடன் தர்ஷனின் காதல் பிரேக்கப் ஆகியுள்ள நிலையில் மீரா மிதுனுடன் இணைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷன், சனம் ஷெட்டியுடன் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் தொடங்கிய அவர்களின் நட்பு பின்பு காதலாக மாறியது. சனம் ஷெட்டியும் தர்ஷனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக தர்ஷனுக்கும் சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

https://twitter.com/tharmeera_fc_sl/status/1223255092226191361இந்த விஷயம் சனம் அண்மையில் தான் தெரியவந்தது.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக கூறிய சனம், தன்னை திருமணம் செய்ய தர்ஷன் மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பெரும் பூதாகரமாகியுள்ளது.

இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ட்ரோல் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். அதில் பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுனும் தர்ஷனும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆறுதல் கூறிகொள்ளுகின்றனர்.

இதேவேளை, ஆண்டவன் அல்ரெடி முடிச்சு போட்டுட்டான் தர்ஷனும் மீராவும்தான் எனவும் நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.