மகாநடி படத்திற்கு தேசிய விருது வென்றபிறகு இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகை ஆகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு ஹிந்தி பட வாய்ப்புகளும் வர துவங்கிவிட்டன. தற்போது ரஜினி168 படத்தில் நடித்து வருகிறார் அவர்.
இந்நிலையில் தற்போது அவர் நடித்துள்ள மிஸ் இந்தியா என்ற படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. நரேந்திர நாத் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் பல கெட்டப்களில் நடித்துள்ளார். அதற்காக அதிக சிரமப்பட்டு தன் தோற்றத்தை மாற்றி மாற்றி நடித்தாராம் அவர்.
மிஸ் இந்தியா படம் மார்ச் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது.







