தமிழ் திரையுலகில் பிக்பாஸ் தர்ஷன்- நடிகை சனம் ஷெட்டி காதல் விவகாரம் தான் படு ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நிச்சயதார்த்தம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள தர்ஷன் மறுப்பதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் சனம் ஷெட்டி.
ஆனால் தற்கொலை செய்து கொள்வேன் என தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், தனக்கு வரும் படவாய்ப்புகளை தடுக்க ஏராளமான முயற்சிகள் எடுத்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் தர்ஷன்.
இந்நிலையில் பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்த சனம் ஷெட்டி, பிக்பாஸ் அபிராமி பற்றி பேசியுள்ளார்.
அதில், மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு தர்ஷனுடன் சேர்ந்து என்னையும் அழைத்தனர், விமானத்தில் ஏறியதும் அபிராமி, தர்ஷன் பேசிக் கொண்டே வந்தனர்.
என்னை தர்ஷனிடம் அபிராமி பேசவே விடவில்லை, உன்னை என் தோழியாக நினைத்தேன், எங்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ஏன் இப்படி செய்கிறாய் என அபிராமியிடம் கேட்டேன்.
அதற்கு அவர், உனக்கு மனநலம் சரியில்லை, போய் மருத்துவரை பாரு என பேசினார், இதனால் நான் மிகவும் மனமுடைந்து போனேன் என தெரிவித்துள்ளார்.