தெய்வங்களுக்கு இந்த பொருட்களில் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்…!!

பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

கடவுள் பக்தர்கள், கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.

இதனை தமிழில் “திருமுழுக்கு ” என்று பெயரால் அழைக்கப்படுகின்றது.

அபிஷேகத்துக்கு நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தி இறைவனை குளிர செய்தனர் என புராணங்கள் கூறுகின்றது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு கடவுளுக்கு என்றே தனி தனியாக அபிஷேகங்கங்கள் செய்வது வழக்கம் ஆகும்.

அந்தவகையில் தெய்வங்களுக்கு எந்த பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்ன நன்மை கிடைக்கும் என இங்கு பார்ப்போம்.

  • மஞ்சள் பொடியில் அபிஷேகம் செய்தால் ராஜ வசியம் கிடைக்கும். அதாவது அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.
  • திரு மஞ்சன பொடியில் அபிஷேகம் செய்தால் கிரக தோஷம் நீங்கும்.
  • அரிசி மாவில் அபிஷேகம் செய்தால் கடன் பிரச்சனை விலகும்.
  • வயிறு வலி பிரச்சனையில் அவதிப்படுபவர்கள், சந்தனாதி தைலம் அபிஷேகம் பண்ணுவது நல்லது. ஏனென்றால் சந்தனாதி தைலம் அபிஷேகம் செய்தால் வயிறு உபாதை நீங்கும்.
  • பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தால் செல்வம் செழித்தோங்கும்.
  • தேனில் அபிஷேகம் செய்தால் நல்ல சரீரம் கிடைகும். மேலும் குரல் வளம் பெருகும்.
  • நெய் அபிஷேகம் செய்பவர்களுக்கு மோட்சத்தை கொடுக்கும்.
  • ஆயுள் விருத்தி உண்டாக வேண்டுமென்றால் பால் அபிஷேகம் செய்யுங்கள்.
  • பிள்ளை பாக்கியம் பெற தயிர் அபிஷேகம் செய்யுங்கள்.
  • துன்பம் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஆகவே துன்பம் விலகி இன்பத்துடன் வாழ வேண்டுமானால் சாத்துக்குடி அபிஷேகம் செய்து வாருங்கள்.
  • நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழவேண்டுமானால் ஆரஞ்சு அபிஷேகம் பண்ணுங்கள்.
  • உங்கள் உடல் நலம் காக்க பட வேண்டுமானால் கரும்புச்சாறு அபிஷேகம் பண்ணுவது சிறந்தது.
  • எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்து வந்தால் எம பயம் நிவிர்த்தியாகும்.
  • உயர்ந்த பதவியை விரும்பாதகவர்கள் ஒருவரும் இருக்க முடியாது .உங்களுக்கு நல்ல பதவி கிடைக்க வேண்டுமென்றால் இளநீர் அபிஷேகம் செய்யுங்கள்.
  • நெல்லி பொடி அபிஷேகம் செய்தால் ரோகத்தை போக்கும்.
  • மன அமைதியுடன் சந்தோஷமாக வாழ வேண்டுமானால் சந்தோஷத்தை கொடுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்யுங்கள்.
  • சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கீர்த்தியை கொடுக்கும்.