சாம்சுங் நிறுவனம் Galaxy S10 Lite எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது..!!

சாம்சுங் நிறுவனம் Galaxy S10 Lite எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 6.7 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 855 Processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதன கமெராக்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானத 560 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது