13 வயது சிறுவனுக்கு ஆபாச படங்களை அனுப்பி மோசமாக நடக்க முயன்ற இந்திய ஆசிரியை, ஜார்ஜியாவில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்தவர் ரூமா பைரபகா. ஜார்ஜியா நாட்டின் எப்சிபா நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவர் 13 வயது சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி, தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதனால் அவரை கைது செய்து பொலிசார், அமெரிக்க குடியுரிமை இல்லாத பைரபகாவை, தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார். மேலும், சிறுவர் துன்புறுத்தல் மற்றும் அநாகரீகமான நோக்கங்களுக்காக குழந்தையை கவருதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக நடவடிக்கைக்கு ஆளாவார் என தெரிகிறது.
கைது செய்யப்பட்ட ஆசிரியை, மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருக்கிறார். அதன் விளைவாக நாடு கடத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.
இது குறித்து பேசிய வழக்கறிஞர்கள், ஆசிரியை மீது காதல் வலையில் அந்த 13 வயது சிறுவன் விழுந்திருக்கிறான். இருவரும் பல நேரங்களில் தனிமையில் சந்தித்து பேசி இருக்கின்றனர். பைரகாவை சந்திக்க வீட்டிற்கு தெரியாமல் சென்று வந்திருப்பத தெரிய வந்துள்ளது என்று கூறி உள்ளனர்.