கரோனோ வைரஸ் பரவுவது எப்படி?

சீன நாடு சார்ஸ் நோய்த்தாக்குதலில் இருந்து தற்போது மீண்ட நிலையில், அடுத்தபடியாக கரோனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சுமார் 20 நாட்களுக்கு உள்ளாகவே தாய்லாந்து, ஜப்பான் போன்ற அண்டை நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கரோனோ வைரஸ் என்பது மெர்ஸ் மற்றும் சார்ஸ் என்ற கலவையாகும். சாதாரணமான சளி மற்றும் இருமல் பிரச்சனை போல தோன்றினாலும், உரிய சிகிச்சைகள் இல்லாத பட்சத்தில், மெல்ல மெல்ல இதன் பாதிப்பு அதிகமாகி உயிரை பறிக்கும் அபாயமும் இருக்கிறது.

இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நேரத்தில் நுரையீரலை தாக்கும். பின்னர் நுரையீரல் அலர்ஜிக்குள்ளாகி காய்ச்சல், 2 முதல் 3 நாட்களுக்கு வறட்டு இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.

பின்னர் நாளடைவில் மூச்சு விடுவதையே சிரமப்படுத்தி, இறுதியில் ஜன்னி என்று அழைக்கப்படும் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது. பின்னர் சிறுநீரக செயலிழப்பு, மரணம் போன்றவை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மெர்ஸ் மற்றும் சார்ஸ் மூலமாக கரோனோ வைரஸ் காற்றில் கலந்து பரவுகிறது. இதனால் ஒரே நேரத்தில் பலருக்கும் இத்தொற்று பாதிப்பு ஏற்படலாம். கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் தும்மும் பட்சம் மற்றும் இருமும் பட்சம் மூலமாகவும் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது. இதற்கான தடுப்பு மருந்துகள் தற்போது வரை கண்டறியப்படவில்லை.