துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
நேற்று இதற்கு வகையில் பதில் அளிக்கும் வகையில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார். மேலும், ரஜினிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திரெளபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி, ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்க முடியாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார். நடந்த உண்மையை வெளியே தைரியமாக பேசினால் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.