ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது பதவியை இராஜினாமா செய்தார்

ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது பதவியை இராஜினாமா செய்தார். அமைச்சரவையும் கலைந்தது. பதவிவலகல் கடிதத்தை ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் அவர் வழங்கினார்.

பிரதமராக மெத்வதேவ் ஆற்றிய பணியை பாராட்டி, நன்றி தெரிவித்த புடின், மெத்வதேவின் நோக்கங்களை, பிரதமரின் அமைச்சரவை நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அரசியலமைப்பை மாற்ற வேண்டுமென புடின் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மெத்வதேவ் தலைமையிலான அரசு பதவிவிலகியுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பு கவுன்சிலில், மெத்வதேவை அதிகாரியாக நியமிக்க புடின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமான திமித்ரி மெத்வதேவ், 2012 முதல் ரஷ்யாவின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். 2008 – 12ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.