எவ்வளவு பாதுகாப்புகள் இருந்த போதிலும் பலரும் சாலை விபத்து என்ற ஒரு கட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த ஹிந்தி சினிமா நடிகை ஷபானா ஆஸ்மி நேற்று மாலை கடும் விபத்தை சந்தித்துள்ளார்.
மும்பை புனே சாலையில் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரின் கார் கலாபூரில் ட்ரக் மீது மோதியதால் கடும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மகாராஷ்ட்ராவின் ரைகட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.









