தமிழில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் தெலுங்கில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை பூஜா ஹெக்டே.
தற்போது இந்தி படங்களில் நடித்து வருபவருக்கு ரசிகர் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாஸ்கர் ராவ் என்பவர் பூஜாவை பார்ப்பதற்காக ஐந்து நாட்களாக சாலையில் படுத்து உறங்கியுள்ளாராம்.
இதை தெரிந்து கொண்ட பூஜா அவரை சந்தித்த தருணத்தை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மேலும் தனக்காக ரசிகர்கள் இவ்வாறு சிரமப்படுவதை கண்டு மனம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.







