நடிகை அதிதி ராவ்வை தவறான இடத்திற்கு அழைத்த தயாரிப்பாளர்…..

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பாலிவுட் நடிகை அதிதி ராவ். இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார்.

மேலும், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் “சைக்கோ” எனும் படம் இம்மாதம் வெளியாகவும் உள்ளது.

இந்நிலையில் நடிகை அதிதி ராவ் #METOO குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து ஒரு நேர்காணலில் அவர் பேசியதாவது, ”நான் மும்பைக்கு வந்தபோது, 4 மாதங்களில் எனக்கு வேலை கிடைத்தது. இதன்பின் அங்கு நான் Casting Couch – ஐ எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது என்னை ஒரு தயாரிப்பாளர் கூட தவறாக படுக்கைக்கு அழைத்தார்.

அந்த நாட்கள் என்னுடைய வாழ்வில் நான் எதிர்கொண்ட மோசமான நாட்கள். நான் எப்போதெல்லாம் காஸ்டிங் படுக்கைக்கு எதிராகப் பேசிவருகிறேனோ, அப்போதெல்லாம் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.