பிரித்தானியாவில் கிரடிட் கார்ட்டினை பயன்படுத்தி இனி இதனை செய்ய முடியாது

பிரித்தானியாவில் இடம்பெறும் சூதாட்டங்களுக்கான பணப்பரிமாற்றம் கிரடிட் கார்ட் மூலமாக இடம்பெறுவது அதிகமாகியுள்ளது.

இதனை தடுக்க பிரித்தானிய அரசு அதிரடியாக களமிறங்கியுள்ளது.

இதன்படி இனிவரும் காலங்களில் சூதாட்டங்களுக்கு கிரடிட் கார்ட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.

எனவே சுமார் 24 மில்லியன் சூதாட்டக்காரர்கள் கிரடிட் கார்ட்டினை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை UK Finance வெளியிட்டுள்ள தகவல்களின்படி 800,000 பிரித்தானியர்கள் சூதாட்டத்திற்காக கிரடிட் கார்ட்களை பயன்படுத்துவதனை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும் புதிய தடையானது எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.