தர்பார் படத்திற்கு எதிராக நடக்கும் சதி மர்மம்! அதிர்ந்து போன படக்குழு…..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 9 ம் நாள் பிரம்மாண்டமாக தியேட்டர்களில் வெளியானது.

அண்மையில் இப்படத்தில் காசிருந்தா ஜெயில்ல இருக்கிறவங்களும் ஷாப்பிங் போலாம் என்ற வசனம் சர்ச்சையானதால் அது தயாரிப்பு நிறுவனத்தால் நீக்கப்பட்டது.

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் சிலர் படத்தை பார்க்க யாரும் தியேட்டருக்கு போக வேண்டாம் என வசூலை கெடுக்கும் விதமாக தகவல்களை பரப்பி வருவதாகவும், மக்கள் இதை நம்ப வேண்டாம் என்றும், சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகும் அறிக்கை வெளியிட்டுள்ளது.