10 வருடத்தில் 7 கும்பலிடம் சிக்கி பரிதவித்த சிறுமி..! விசாரணையில் வெளியான உண்மை!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பெங்காலி கேம்ப் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு அருகே கடந்த 2010 ஆம் வருடத்தின் போது வீட்டின் வெளியே 11 வயதுடைய சிறுமி திடீரென மாயமாகியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., காவல்துறையினர் மேற்கொண்ட அனைத்து விசாரணையும் தோல்வியை தழுவியது.

இந்த தருணத்தில்., சுமார் 10 வருடத்திற்கு பின்னர் 2 குழந்தைகளுக்கு தாயான பின்னர் பெண் மீட்கப்பட்டு அவருடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த 10 வருடத்தில் பெண்ணை கடத்தி விற்பனை செய்து., பாலியல் தொல்லை மற்றும் கற்பழிப்பு போன்ற கொடூரங்களை சந்தித்தாக பெரும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும்., இந்த விஷயம் நடைபெற்ற தினத்தில் சிறுமியை இரண்டு பெண்கள் கடத்தி ஹரியானா மாநிலத்தை சார்ந்த பாணிபாத் பகுதியை சார்ந்த நபரிடம் விற்பனை செய்ததும்., சிறுமி பாலியல் கொத்தடிமை போல அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வந்துள்ளார்.

மேலும்., சிறுமியின் குடும்பத்தினை சார்ந்த நபர்களே சிறுமியை சீரழித்துள்ள நிலையில்., இதன் காரணமாக சிறுமி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளது தெரியவந்துள்ளது. சிறுமி பதேபாத் பகுதியை சார்ந்த தர்மவீர் என்பவனிடம் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

பின்னர் வாடகைக்கு வீடெடுத்து சிறுமியை தங்க வைத்த நிலையில்., வீட்டின் உரிமையாளர் சந்தேகமடைந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பின்னர் சிறுமி மற்றும் 2 குழந்தைகளை மீட்டதும்., 11 வயது முதல் தற்போது வரை 7 பேருக்கு சிறுமி விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இக்கொடூரத்தில் ஈடுபட்ட 10 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.