50 லட்சம் மோசடி… ஏகப்பட்ட திருமணம்! இத்தனை கள்ளக்காதலிகளா?

கண் பார்வை தெரியாத நபர் ஒருவர் 50 பேரிடம் 50லட்சம் பணத்தினை ஏமாற்றி வாங்கியது மட்டுமின்றி, ஏகப்பட்ட பெண்களைத் திருமணம் செய்து மோசடியும் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் உஷ்ரப் அலி(24). என்ஜினியரிங்கு முடித்த இவர் வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு பெங்களூர் சென்று பேருந்தில் திரும்பியுள்ளார். இவரிடம் பேருந்தில் அறிமுகமானவர் தான் டேவிட் என்ற கண் தெரியாத நபர்.

பேருந்தில் ஏற்பட்ட பழக்கத்தில் உஷ்ரப்பிடம் போன் நம்பரை வாங்கிக்கொண்டார் டேவிட். பின்பு அடிக்கடி அவருக்கு போன் செய்து தான் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார்.

அதற்காக பணம் அதிகமாக செலவாகும் என்று கூறியதும், உஷ்ரப் 4 லட்சத்து 25ஆயிரம் ரூபாயை 3 தவணையாக கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்ட டேவிட் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்ததால் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பொலிசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு பேருந்தில் பயணம் செய்யும் டேவிட், அருகில் பயணிப்பவர்களிடம் பேசிப் பழகி அவர்களிடம் போன் நம்பர் வாங்கிக்கொண்டு, வேலை வாங்கித்தருவதாக பணத்தினை வாங்கிவிடுவாராம். இவ்வாறு 6 வருடத்தில் 50 பேரிடம் 50 லட்சம் பணத்தினை பறித்துள்ளார்.

அவ்வாறு வாங்கிய பணத்தினை வைத்து சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு இங்கு பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதுடன், சென்னை, பெங்களூரு, கரூரில் 10க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் டேவிட். ஒரு மாற்றுத்திறனாளி நபர் ஏகப்பட்ட திருமணம், பண மோசடி, கள்ளக்காதலிகளுடன் வாழ்க்கை என இருந்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.