விக்னேஷை பிரிந்திருக்கும் நயன்தாரா ஏக்கத்துடன் வெளியிட்ட புகைப்படம்…

இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, காதலர் விக்னேஷை பிரிந்துவிட்டார் என்ற பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததையடுத்து நயன்தாரா விக்னேஷ் உடன் எடுத்த புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை சேர்ந்து கொண்டாடிய இந்த ஜோடி, புது வருடம் பின்பு விருது விழா என தனியாகவே வந்திருந்தார்.

எங்கு சென்றாலும் விக்னேஷ் உடன் செல்லும் நயன்தாரா தனியாக வந்திருந்ததால் இருவருக்குள்ளும் பிரச்சினை என்றும் காதலில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்ற தகவல் தீயாய் பரவியது.

இதற்கு நேற்றைய தினத்தில் குறித்த தகவல் பொய் என்று இருவரும் கூறியதாக தகவல் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ பிரேக்அப் இல்லையா? என்று தனது மகிழ்ச்சியினை ஏக்கமாக வெளியிட்டிருந்தனர்.

தற்போது நயன்தாரா உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் மிஸ் விக்கி என்ற வாசகம் எழுதியிருப்பதை தனது முகத்தினை மறைத்துக்கொண்டு வைத்திருக்கும் புகைப்படத்தினையும், விருது விழாவில் கட்டியிருந்த பட்டுப்புடவையில் விக்னேஷ் உடன் சேர்ந்த எடுத்த புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் சிலர் எப்போ கல்யாணம்? என்றும் சிலர் கொமடியாக அப்போ விக்கியும் மிஸ்ஸா? என்றும் கேள்வியினை எழுப்பி வருகின்றனர். நயன்தாரா வெளியிட்ட இந்த புகைப்படத்தினால் என்னதான் நடக்கின்றது தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.