அனகோண்டா நடிகைக்கு ஏற்பட்ட விபரீத ஆசை….

தெலுகு சினிமாவின் கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு, தமிழ் திரையுலக நடிகர்களின் மீது மற்றும் பல திரை பிரபலங்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து சமூக வலைத்தளத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார். மேலும், சர்ச்சை நடிகையான இவர் பட வாய்ப்புக்காக பல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்தி ஏற்மற்றிவிட்டதாக கூறி வந்தார்.

மேலும், பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் கூட நடத்தி சர்ச்சையை கிளப்பினார். அதன் முக்கிய ஆதாரங்களை SRI REDDY, SRI LEAKS என வலைபக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

அதுபோல தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலர் குறித்தும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார். எல்லோரை பற்றியும் போடும் ஒரே ஸ்டேட்டஸ் தான். அவங்க டோட்டல் இமேஜ் கிளோஸ்’ ! சமீபத்தில் நடிகர் விஷாலை கூட அனகோண்டா போல் இருக்கும் என கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார்.

மிகவும் சர்ச்சைக்குரிய நடிகையான ஸ்ரீரெட்டி சமீபத்தில் அரசியல் குறித்து வெளியிட்ட கருத்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றது. நடிகை ஸ்ரீரெட்டி ரஜினிகாந்துடன் அரசியலில் சேர விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி, “எங்கள் இருவருக்கும் கடவுள் நம்பிக்கை, உண்மை போன்ற ஒரே விதமான சித்தாந்தங்கள் இருக்கின்றது. எனவே, அவருடைய கட்சியில் நான் இணைய இருக்கின்றேன் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார். இதற்கு முன்பாக அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேரும் திட்டத்தில் தான் இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும் அது வதந்தி என்று தற்பொழுது கூறுகின்றார்.