இந்தோனேசியா – சுமத்ரா தீவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியா – சுமத்ரா தீவில் அச்சே பகுதியை அண்மித்த கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் பீதியில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கெரீபியன் போட்ரிக்கோ தீவகத்தினை அண்மித்த கடற்பரப்பிலும் 6.5 ரிச்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.