அமெரிக்க வெளிநாட்டு துருப்பினரை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க வெளிநாட்டு துருப்பினரை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சொலைமானி கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் இராணுவ தளபதி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க படை தரப்பினர் ஈரானிய இராணுவ தளபதி குவாசிம் சொலைமாணியை கொலை செய்ததன் பின்னர் அந்த பிராந்தியத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் ஊடாக பயணிக்கும் கப்பல்கள் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய தளபதியின் கொலை குறித்து பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இதுவரை எந்தவித கருத்தையும் வெளியடாதநிலையில் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் அகழ்வு பிரதேசங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.