இன்றைய நாளில் எந்த ராசிக்காரங்களுக்கு அதிஸ்ரம் தெரியுமா ? இதோ இன்றைய ராசிபலன் (04.01.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 04-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற் பட்டு கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக பணியாளர்களின் உதவியுடன் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்பட்டாலும், செலவுகளும் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பணவரவுக்கும், புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டாகும். மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் ஏற்படும் ஒரு பிரச்னையை சமயோசிதமாகச் சமாளித்து, சக ஊழியர் களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். சக ஊழியர்களிடம் விவாதம் செய்யவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் செலவும் ஏற்படும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். குடும்பத் தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், ஒருவழியாக சமாளித்துவிடுவீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், பெரிதுபடுத்தாமல் பொறுமையாக இருப்பது நல்லது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்பார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

துலாம்
துலாராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பீர்கள். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மத்தி யில் மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். ஊழியர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்ததை விடவும் லாபம் அதிகரிப்பது மகிழ்ச்சி தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டா கும். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். அலுவல கத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல் படுவார்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக் கூடும்.அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரம் விறு விறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். திடீர் செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மீனம்
மீனராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை முடிப்பதில் சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.