சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் படம் குறித்து சமூக வலைதளத்தில் லீக்கான சில நிமிட காட்சிகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜனவரி 9 ம் தேதி தர்பார் படம் வெளியாகிறது. அவரின் படங்கள் என்றாலே வழக்கம் போல இப்படத்திற்கு மாஸ் கூடியுள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நயன்தாராவின் நகைச்சுவையான காதல் காட்சிகளில் 30 நொடிகள் கால அளவு கொண்ட காட்சிகள் வீடியோ சமூகவலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே படம் வெளியாவதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.