கிளிநொச்சியில் கடந்த வாரம் இடம்பெற்ற பொலித்தீன் அற்ற முன்மாதிரியான நிகழ்வு

கிளிநொச்சியில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று பொலித்தீன் பாவனை அற்ற வகையில் முன்மாதிரியான விழிப்புணர்வு நிகழ்வாக இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையினால் கடந்தவாரம் கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் பட்டப்படிப்புக்க உதவி பெறும் மாணவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல் இடம்பெற்றது. இதன்போது பொலித்தீன் அற்ற ஒரு நிகழ்வாக மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் குறித்த நிகழ்வை நடாத்தியுள்ளனர்.

அதாவது குறித்த நிகழ்வில் ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக், தண்ணீர் போத்தல், உணவு பயன்படுத்தப்படும் பொலீத்தீன், பிளாஸ்ரிக் கோப்பை என எந்த வகையான பொருட்களும் பயன்படுத்தப்படாது நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

தற்போதைய உலகில் பிளாஸ்ரிக் கழிவுகள் ஆபத்தாக மாறிவருகின்ற நிலையில் அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை பாராட்டைப் பெற்றுள்ளது.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் ஒத்துழைப்புடன் அறக்கட்டளையின் உறுப்பினர் விவசாயத்ததுறை விரிவுயைாளர் றஜிதனின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.