டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமான ரியோ தற்போது நடிகராக சினிமாவில் அடுத்த பரிமாணம் காட்டிவருகிறார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார்.
தற்போது படவாய்ப்புகளும் அவருக்கு கிடைத்து வருகின்றன. அடுத்ததாக காதல் ஒன்று கண்டேன் படத்தில் நடித்து வருகிறார்.
இதில் அவருடன் நட்சத்திரா, அஸ்வின், பாலா என பலர் நடிக்க இயக்குனர் சங்கரின் மாணவராகிய புனித் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ட்ரைலர் யூடூபில் நேற்று வெளியாகியுள்ளது.
விஜே ரம்யா, விஜே மணிமேகலை, பிக்பாஸ் கவின் என பலர் இதை நேற்று ஷேர் செய்துள்ளனர்.
தற்போது வரை இந்த ட்ரைலரை 2.75 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.