ரஜினி திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்ரார் ரஜினி காந்த் நடிக்கும் 168ஆவது திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், முன்கூட்டியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் ஆயுதபூஜைக்கு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

சிவா இயக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் டி.இமான் இசையமைப்பதுடன், நடிகர் சூரி, சதீஸ் ஆகியோர் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.