சந்திரமுகி 2 கதை ரெடி! ரஜினிக்கு பதில் ஹீரோவாக பிரபல நடிகர்

ரஜினி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் சந்திரமுகி. அந்த படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை எழுதி முடிந்துவிட்டதாக இயக்குனர் பி.வாசு தற்போது தெரிவித்துள்ளார்.

முன்னணி தயாரிப்பு நிறுவனம் அதை தயாரிக்கவுள்ளது என கூறியுள்ள அவர், அதில் ஹீரோவாக முன்னணி நடிகர் நடிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அவர் ரஜினியின் பெயரை குறிப்பிடவில்லை. அதனால் அவர் சந்திரமுகி 2ல் நடிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.