வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிசில் இணைய வேண்டும்!

வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் இளைஞர்கள், பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டுமென யாழ்ப்பாணா் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிகால் தல்துவ தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 125 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இன்று (31) நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

தற்போது கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் படித்து நல்ல நிலைக்கு வந்தப் பின்னர், பொலிஸ் சேவையில் இணைவதன் மூலம், தங்களுடைய பகுதி மக்களுக்கு சேவையாற்ற முடியுமெனவும் கூறினார்.