பாலியல் துன்புறுத்தலுக்காகவும் டாக்டர் பட்டம் தரலாம்….!

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக பிரபல கவிஞர் மற்றும் பாடல் ஆசிரியருமான வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கவுள்ளனர். இதனை பாடகி சின்மயி கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் :- 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்க போகிறார்களாம். நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு எந்த வித சேதமும் இல்லை. ஆனால் இதை பற்றி வெளியே சொன்ன எனக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த டாக்டர் பட்டம் அவரின் மொழி ஆளுமைத்திறனுக்காக வழங்கப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அத்துடன் அவருக்கு பாலியல் துன்புறுத்தலுக்காகவும் ஒரு டாக்டர் பட்டம் தரலாம். உங்களின் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக கட்டிருக்கிங்க, வெள் டன் தனியார் பல்கலைக்கழகம்.

இந்த வருடம் திரு வைரமுத்து அவர்கள் அரசியல் மற்றும் கலைத்துறை பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்துள்ளார். ஆனால் அவர் மீதான புகாரை விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நல்ல நாடு, நல்ல மக்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.